மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் மீது வாள்வெட்டு: யாழில் பட்டப்பகலில் கொடூர சம்பவம்..!
[2025-07-30 15:31:39] Views:[10]
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மானிப்பாய் வீதி, கட்டுடை பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த நபரை கீழே விழுத்தி வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில், நபரொருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த வேளை பின்னால் முச்சக்கர வண்டியில் வந்த மூவர் அவரை கீழே தள்ளி விழுத்தி விட்டு வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டனர்.
தாக்குதல் மேற் மேற்கொண்ட பின்னர் முச்சக்கரவண்டியில் வாழ்ந்த நபர்கள் அங்கிருந்து தப்பித்துச் சென்றனர். ஊரெழு பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு வாள் வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
படுகாயமடைந்த நபரை வீதியில் சென்றவர்கள் அவரை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். மேற்படி சம்பவம் தொடர்பான விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.










