உலகின் மிகவும் அழகான தீவாக இலங்கை தேர்வு.
[2025-07-30 14:34:12] Views:[19]
2025 ஆம் ஆண்டிற்கான 'உலகின் மிக அழகான தீவு'என்று இலங்கை பெயரிடப்பட்டுள்ளது நம்நாட்டிற்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது.
உலகளாவிய பயண வலைத்தளமான ‘Big 7 Travel’ ஆண்டுதோறும் வெளியிடும் உலகின் மிக அழகான 50 தீவுகள் குறித்த அறிக்கையில் இலங்கைக்கு முதலிடத்தை அந்த வலைத்தளம் பெற்றுத் தந்துள்ளது.
முந்தைய ஊடக முடிவுகள், Big 7 Travel ஆசிரியர் குழுவின் பங்களிப்புகள், சமூக ஊடகங்களில் உலகின் பயண இடங்களின் புகழ் மற்றும் 2025 ஆம் ஆண்டில் பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் இடங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் ஒட்டுமொத்த மதிப்பெண்ணின் அடிப்படையில் இந்தப் பட்டியல் தொகுக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்பையிலேயே இலங்கை முதலாம் இடத்தை பெற்றுள்ளமை குறிப்பிடதக்க விடயமாகும்.










