அஸ்வெசும பயனாளர்களுக்கு மகிழ்ச்சி தகவல்: கொடுப்பனவு நாளை வழங்கப்படும்.
[2025-07-29 19:30:42] Views:[16]
அஸ்வெசும பயனாளர்களின் ஜூலை மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவு 30 ஆம் திகதி வங்கி கணக்குகளில் வைப்புச் செய்யப்படும் என நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அமைச்சின் நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி பயனாளிகளின் 600,786 வங்கி கணக்குகளில் சுமார் 3,003,840,000.00 ரூபாய் நிதி வைப்புச் செய்யப்படும் என் கூறப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு ஜூலை 30 ஆம் திகதி முதல் தமக்கான நலன்புரிப் பணம் பயனாளிகள் வங்கிக் கணக்கு ஊடாகப் பெற்றுக் கொள்ள முடியும்.










