வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று ஆரம்பம்..!
[2025-07-29 15:35:11] Views:[11]
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம், இன்றைய தினம் காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
இன்று காலை முதல் சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற்று, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ கொடியேற்றத்துடன் மகோற்சவம் ஆரம்பமானது.
இன்றிலிருந்து தொடர்ந்து 25 நாட்களுக்கு மகோற்சவம் இடம்பெற்று சப்பரம், தேர், தீர்த்தம் என்று நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவம் நிறைவுபெறும்.










