விமான நிலையங்களுக்கு அருகில் இது செய்வது குற்றம்: அமுலாகும் புதிய தடை உத்தரவு.!!
[2025-07-28 22:28:23] Views:[10]
நாட்டில் உள்ள விமான நிலையங்களுக்கு அருகில் பட்டங்களை பறக்க விடுவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
விமான நிலையங்களுக்கு அருகில் பறக்கவிடப்படும் பட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, விமான விபத்துக்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாக விமானப்படை எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் முன்னதாக, விமான நிலையங்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பு காரணங்களுக்காக சர்வதேச விமான நிலையங்களுக்கு அருகில் பட்டங்களை பறக்க விடுவதற்கு தடை விதிப்பதாக விமான நிலைய மற்றும் விமான சேவைகள் லிமிடெட் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.










