முன்னாள் பெண் போராளி தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு.!
[2025-07-28 10:14:18] Views:[12]
யாழ்ப்பாணத்தில் முன்னாள் பெண் போராளி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்றையதினம்(27) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொக்குவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த சிறீஸ்கந்தராசா தவரூபி (வயது 48) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
திருமணமாகாத நிலையில் தனது சகோதரியுடன் வசித்து வந்த அவர் மன விரக்தியில் நேற்று மதியம் உணவருந்திய பின்னர் தனக்குத்தானே மண்ணெண்ணெயை ஊற்றி தீ மூட்டி உயிர் மாய்த்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.










