7 500 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ள மாற்றுத்திறனாளிகளின் உதவித் தொகை.
[2025-07-25 10:43:37] Views:[18]
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை எதிர்காலத்தில் 5000 ரூபாவில் இருந்து 7 500 ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல்கள் திணைக்களத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது இதனை குறிப்பிட்டடார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான வீடு கட்டுவதற்கு வழங்கப்படும் நிதி உதவியை அதிகரித்தல், மாற்றுத்திறனாளிகளுக்கான காப்பீட்டு முறையை அறிமுகப்படுத்தல் போன்ற திட்டங்களையும் எதிர்காலத்தில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.










