யாழில் கஞ்சாவுடன் இரு இளைஞர்கள் கைது..!!
[2025-07-24 22:02:02] Views:[13]
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வைத்து கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டனர்.
காரைநகர் பகுதியைச் சேர்ந்த 32 மற்றும் 34 வயதுடைய இருவரே கஞ்சாவை எடுத்து சென்றபோது பொன்னாலை பகுதியில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 12 கிலோ 730 கிராம் எடையுடைய கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கையளிக்கப்பட்டனர்.
விசாரணைகளின் பின்னர் அவர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.










