100 ரயில் நிலையங்களை நவீனமயமாக்கும் புதிய திட்டம்..!
[2025-07-24 21:06:04] Views:[13]
‘Dream Destination’ திட்டத்தின் கீழ் 100 ரயில் நிலையங்களை நவீனமயமாக்குவதை முன்னெடுப்பதற்கான முக்கிய கூட்டம் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
உலக தரத்தின்படி தூய்மை, பாதுகாப்பு மற்றும் பயண வசதிகளுடன் கூடிய புதிய ரயில் நிலைய கட்டமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட இந்த திட்டம், பொது-தனியார் கூட்டாண்மையின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.
சிறப்புத் தேவைகள் உள்ளவர்கள் உட்பட அனைத்து பயணிகளுக்கும் பாதுகாப்பான மற்றும் சுத்தமான தங்குமிடத்தை வழங்குதல். மற்றும் புதிய அடையாளத்துடன் ரயில் நிலையங்களின் கட்டுமானம் அமைத்தல் போன்ற முடிவுகள் எட்டப்பட்டுள்ளன. மற்றும் 06 மாதங்களுக்குள் கட்டுமானப் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.










