இஸ்ரேலில் 20 இலங்கையர்களை ஏற்றிச் சென்ற பேருந்து தீ விபத்துக்குள்ளாகியது..!
[2025-07-20 10:13:01] Views:[16]
இஸ்ரேலில் இலங்கையைச் சேர்ந்த விவசாயப் பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேரூந்து ஒன்று தீ விபத்துக்கு உள்ளாகியதா வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இஸ்ரேலில் உள்ள கிரியாத் மலாக்கி பகுதிக்கு அருகே வேளாண் துறையில் பணிபுரியும் 20 இலங்கை இளைஞர்களை ஏற்றிச் சென்ற பேரூந்து ஒன்றே இவ்வாறு தீ விபத்தில் சிக்கியுள்ளது.
சம்பவத்தின் போது பஸ்ஸிக்குள்ளிருந்த இலங்கையர்கள் கண்ணாடிகளை உடைத்து வெளியே சென்றுள்ளனர். இவ்விபத்தில் பேரூந்தின் ஜன்னலால் குதிக்கும் போது முழங்காலில் காயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.










