மனைவியை வாளால் வெட்டி படுகொலை செய்துவிட்டு தலைமறைவான கணவன்..!
[2025-07-20 09:31:38] Views:[12]
மொனராகலை மாவட்டம் பிபிலை பிரதேசத்தில் குடும்பப் பெண் ஒருவர் கணவனின் வாள்வெட்டுக்கு இலக்காகி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று (19) சனிக்கிழமை மாலை வேலைக்குச் சென்ற கணவன் மது போதையில் வீடு திரும்பியுள்ளார்.
இதன்போது அவருக்கும் மனைவிக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் வீட்டில் வைத்திருந்த வாளால் மனைவியை வெட்டி விட்டு கணவன் வீட்டை விட்டுச் வெளியே சென்றுள்ளார்.
தாக்குதலில் படுகாயமடைந்த மனைவி வீட்டுக்குள் இரத்த வெள்ளத்தில் வீழ்ந்து கிடந் துள்ளார்.
அவர்களின் 5 மற்றும் 7 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் கதறல் சத்தம் கேட்டு வீட்டுக்கு வந்த அயலவர்கள், படுகாயமடைந்த தாயை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார், பிள்ளைகள் இருவரையும் பொறுப்பேற்றதுடன், தலைமறைவாகியுள்ள சந்தேக நபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.










