மலைச்சரிவில் திடீரென பரவிய தீ: பல ஏக்கர் நிலம் எறிந்து நாசம்..!!
[2025-07-18 20:36:16] Views:[13]
இன்று காலை பண்டாரவளை உடுகும்பல்வெல சரணாலயப் பகுதிக்கு அருகிலுள்ள மலைத்தொடரில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.
பண்டாரவளை, அத்தலப்பிட்டிய வனப்பாதுகாப்புப் பிரிவுக்குச் சொந்தமான உடுகும்பல்வெல சரணாலயப் பகுதிக்கு அருகில் அமைந்துள்ள செங்குத்தான மலைச்சரிவில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்தையடுத்து அங்குள்ள பரந்த காட்டுப் பகுதிகளில் தீ பரவல் அதிகரித்து வருகின்றது. தீப்பரவலைக் கட்டுப்படுத்த தியத்தலாவ இராணுவ வீரர்கள் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதுவரை சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பு தீயில் அழிந்து நாசமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பலத்த காற்று, வறண்ட வானிலை மற்றும் செங்குத்தான சரிவு காரணமாக தீயைக் கட்டுப்படுத்துவது கடினமாகியுள்ளதாக வனப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.










