இலங்கை இராணுவத்திடமிருந்து எசல பெரஹெராவுக்கு 6 தொன் கொப்பரை நன்கொடையாக வழங்கிவைப்பு.
[2025-07-18 11:24:37] Views:[13]
வரலாற்றுச் சிறப்புமிக்க எசல பெரஹெரா விழாவின் தீப அலங்காரங்களுக்காக, இலங்கை இராணுவத்தினர் இற்றைய தினம் 6 தொன் கொப்பரையை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
இது, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரோட்ரிகோவின் தலைமையில், விஜயபாகு காலாட்படை படைப்பிரிவின் பங்களிப்புடன் வழங்கப்பட்டது. இந்த கொப்பரை, ஸ்ரீ தலதா மாளிகை மற்றும் அத்துடன் தொடர்புடைய கோயில்களுக்கு விநியோகிக்கப்படும்என கூறப்படுகிறது.










