வயலுக்குள் பாய்ந்த தனியார் பேருந்து: அராலியில் சம்பவம்!
[2025-07-18 09:26:59] Views:[14]
நேற்றைய தினம் வட்டுக்கோட்டை - அராலிப் பகுதியில் தனியார் பேருந்து ஒன்று பயணித்துக்கொண்டிருந்த வேளை திடீரென வயலுக்குள் பாய்ந்ததில் விபத்துக்குள்ளானது.
யாழ்ப்பாணத்திலிருந்து அராலி ஊடாக சித்தன்கேணிக்குச் செல்லும் தனியார் பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.
பேருந்து அண்ணளவாக 10-15 கிலோமீற்றர் வேகத்தில் சென்றுகொண்டிருந்தவேளை, அராலிக்குச் செல்ல வீதியின் வலது புறமாக திரும்பிய வேளை வயலுக்குள் பாய்ந்துள்ளது. இருப்பினும் பேருந்தில் இருந்த பயணிகள் எவருக்கும் எந்தவிதமான உயிர்சேதமும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.










