க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக்கு இனி 07 பாடங்கள் மட்டுமே.
[2025-07-16 15:41:56] Views:[14]
புதிய கல்வி சீர்திருத்தத்திற்கு அமைய குறைக்கப்பட்டு 07 பாடங்களே மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்படும் என கல்வி பிரதியமைச்சர் மதுர செனவிரத்தின தனியார் செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்.
அவற்றில் முக்கிய பாடங்களாக கணிதம், ஆங்கிலம், தாய்மொழி, சமயம் மற்றும் விஞ்ஞானம் ஆகிய ஐந்து பாடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதற்கு மேலதிகமாக இரண்டு பாடங்களை மாணவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.
தொழில்நுட்பம், பௌதீகம், மேலாண்மை மற்றும் தொழில்முனைவு, மனித அறிவியல் மற்றும் சமூக அறிவியல், மருத்துவம் மற்றும் உடற்பயிற்சி ஆகிய பாடங்களில் இரண்டை தேர்ந்தெடுக்கக்கூடிய வாய்ப்புள்ளது என்றார்.
மேலும் ஒரு பாடத்திற்கு வழங்கப்படும் A,B,C,S,W முறைக்கு பதிலாக மதிப்பெண்கள் (GPA) வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.










