காட்டு யானைகளை பாதுகாக்க கடுமையாக்கப்பட்டுள்ள சட்டதிட்டங்கள்.
[2025-07-16 11:50:53] Views:[15]
காட்டு யானைகளை சுட்டு கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, காட்டு யானைகளை சுட்டுக் கொலை செய்யும் நபர்களுக்கு எதிராக அதிகபட்ச சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சுற்றுச்சூழல் அமைச்சு வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்கள பணிப்பாளர் நாயகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
வனவலங்குகளுக்கு அச்சுறுத்தலாக மாறி வரும் தனியார் நிலங்களில் சட்டவிரோத மின்சார வேலிகள் அமைப்பதற்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் மனித-யானை மோதலுக்கு நிரந்தர தீர்வுகளைக் கண்டறியும் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு மத்தியஅமைச்சும் வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களமும் முறையாக ஒழுங்குபடுத்தப்பட்ட மின்சார வேலிகளை நிறுவுவதற்கான அதிக ஆபத்துள்ள பகுதிகளை அடையாளம் கண்டு வருகின்றன.










