yarlathirady.com

ராமேஸ்வரம் - தலைமன்னார் கப்பல் சேவை: 40 வருடங்களின் பின் மீணடும் ஆரம்பம்...!

[2025-07-16 11:17:27] Views:[14]

இந்தியாவின் ராமேஸ்வரம் மற்றும் இலங்கையின் தலைமன்னார் ஆகிய இடங்களுக்கு இடையே 4 தசாப்தங்களின் பின்னர், மீண்டும் கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்க தயாராக இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

துறைமுகங்கள் திணைக்களம் ஊடாக 118 கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் எனினும் மத்திய அரசின் ஒப்புதல் இன்னும் கிடைக்கவில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

வரலாற்றில்,தமிழகத்தின் தனுஸ்கோடியில் இருந்து, இலங்கை தலைமன்னார் வரை, 1914 முதல் கப்பல் போக்குவரத்து இடம்பெற்று வந்தது. எனினும் 1964ம் ஆண்டு வீசிய கடுமையான புயல் காரணமாக, தனுஸ்கோடி கடலில் மூழ்கியதால், அந்த சேவை நிறுத்தப்பட்டது.

இதன் பின்னர், ராமேஸ்வரம் - தலைமன்னார் இடையிலான கப்பல் போக்குவரத்து இடம்பெற்று வந்தது எனினும் இலங்கையின் உள்நாட்டு போர் காரணமாக, 1984ம் ஆண்டு மத்திய அரசால் குறித்த கப்பல் சேவை நிறுத்தப்பட்டது இந்நிலையில் மீண்டும் கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்க தயாராக இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


சினிமாசெய்திகள்
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
4000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணா..!!
2026-04-02 19:24:55
நமித் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ராமாயணா. இப்படத்தில் ராமராக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யாஷ் நடிக்கிறார்கள்.