35 கிலோ தங்கத்துடன் வெளிநாட்டிலிருந்து வந்தவர் கட்டுநாயக்கவில் கைது..!
[2025-07-16 10:40:44] Views:[12]
சுமார் 1.1 பில்லியன் ருபாய் மதிப்புள்ள 35 கிலோ தங்கத்துடன் வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்கத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் துபாயில் இருந்து இலங்கைக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. கொழும்பு கிராண்ட் பாஸ் பகுதியில் வசிக்கும் 32 வயதுடையவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் சுமார் 195 தங்க பிஸ்கட்டுகளும் 13 கிலோ நகைகள் இருந்நதாகக் கூறப்படுகிறது. இச் சம்பவம் தொடர்பில் விமான நிலைய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.










