yarlathirady.com

செவிலியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு: வெளியாகவுள்ள வர்த்தமானி அறிவித்தல்...!!

[2025-07-15 22:12:12] Views:[19]

இலங்கை மருத்துவமனைகளில் செவிலியர் சேவையில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்காக 2020 முதல் 2022 வரையிலான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற்ற 2,650 மாணவர்களையும், செவிலியர் பட்டம் பெற்ற 850 பட்டதாரிகளையும் ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளனர்.

இன்றயா தினம் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அது தொடர்பில் இரண்டு வர்த்தமானி அறிவித்தல்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் என குறிப்பிட்டார்.

2020, 2021 மற்றும் 2022 க.பொ.த உயர்தரப் பரீட்சைகளுக்குத் தோற்றிய 2,650 மாணவர் செவிலியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான வர்த்தமானி அறிவிப்பை இந்த வெள்ளிக்கிழமை (18) நாங்கள் அங்கீகரித்து வெளியிடுகிறோம். எனவே, இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க அவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. கூடுதலாக, கடந்த காலத்தில் செவிலியர் பட்டம் பெற்ற 850 பட்டதாரிகளை பொது சேவையில் இணைத்துக் கொள்ள உள்ளோம். அதற்கான வர்த்தமானி அறிவித்தல் 18 ஆம் திகதி வெளியிடப்படும்.

அதன்படி, பயிற்சி பெறுபவர்களில் ஒரு பகுதியினருக்கும், AL சித்தி பெற்றவர்களில் ஒரு பகுதியினருக்கும் பயிற்சியை ஆரம்பிக்க எதிர்வரும் வெள்ளிக்கிழமை வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிடவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.


சினிமாசெய்திகள்
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
4000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணா..!!
2026-04-02 19:24:55
நமித் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ராமாயணா. இப்படத்தில் ராமராக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யாஷ் நடிக்கிறார்கள்.