துரிதமாக ஆன்லைனில் அபராதங்களை செலுத்தும் புதிய வசதி..!!
[2025-07-15 20:52:40] Views:[14]
நாடுமுழுவதும் நேரடியாக ஒன்லைன் மூலமாக வாகனங்களுக்கான அபராதம் செலுத்தும் வசதி செப்டெம்பர் மாதம் முதல் அமுல்படுத்தப்படும் என்று தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிர்வாக சபை உறுப்பினர் ஹர்ஷ புரசிங்க அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் ஒன்லைன் போக்குவரத்து அபராதம் செலுத்தும் திட்டத்தை செயல்படுத்த சில வாரங்களுக்கு முன்புஅமைச்சரவை அனுமதி கிடைத்ததாகவும் செப்டெம்பர் மாதத்திற்குள் நாடு முழுவதும் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களையும் உள்ளடக்கும் வகையில் நேரடியாக ஒன்லைன் மூலமாக அபராதம் செலுத்தும் முறை செயல்படுத்தப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.










