வடக்கு ஆளுநர் மற்றும் கனேடியத் தூதுவருக்கும் இடையில் விசேட சந்திப்பு.
[2025-07-15 11:18:44] Views:[17]
வடக்கு மாகாண ஆளுநர் N.வேதநாயகன் மற்றும் இலங்கைக்கான கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஷ் இடையிலான முக்கிய சந்திப்பு நேற்று யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
இலங்கையில் தனது பணிக்காலம் அடுத்த மாதத்தில் முடிவடையவுள்ளதாகத் தூதுவர் ஆளுநரிடம் இதன்போது தெரிவித்தார்.
இதுவரை காலம் வழங்கிய ஒத்துழைப்புக்கும், கனேடிய அரசாங்கத்தின் உதவிகளுக்கும் ஆளுநர் நன்றியை தெரிவித்தார்.
பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் பலர் உற்பத்தி முயற்சிகளில் ஈடுபடுகின்றனர் என்பதையும், அவர்களுக்கு ஏற்றுமதி சந்தைகளை உருவாக்கிக் கொடுக்க உதவி தேவை என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
அத்துடன், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய விரிவாக்கம், வடக்கு முதலீட்டு வலயங்கள் போன்ற முன்னேற்றத் திட்டங்கள் பற்றியும் கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஷ் ஆர்வத்துடன் கேட்டறிந்தார்.










