யாழ் கடலில் இலங்கை கடற்படையினர் கையில் சிக்கிய பெரும் தொகை கஞ்சா..!!
[2025-07-15 10:46:58] Views:[12]
நேற்றய தினம் யாழ்ப்பாணம்-எலுவை தீவுக்கு அருகாமையில் உள்ள புதுடு பகுதியில் இலங்கை கடற்படையினரால் நடாத்தப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, 15 மில்லியன் ரூபாய்க்கும் அதிகளவு பெறுமதியான 38 கிலோ 700 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது.
குறித்த கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் மிதந்துக்கொண்டிருந்த பையொன்று கண்காணிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. பின்பு அந்தப் பையில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 38 கிலோ 700 கிராம் கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
கடற்படையின் தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கைகளின் மூலம் கரைக்கு கொண்டு வர முடியாததால், கடத்தல்காரர்கள் கேரள கஞ்சாவை கடலில் கைவிட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதுடன், பறிமுதல் செய்யப்பட்ட கேரள கஞ்சாவின் பெறுமதி சுமார் 15 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் என கூறப்படுகிறது.
கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா தொகையானது, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஊர்காவல்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்படவுள்ளது.










