யாழில் பரபரப்பு சம்பவம்: வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்..!!
[2025-07-15 09:12:14] Views:[15]
யாழ்ப்பாணம், கொழும்புதுறை பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இனம் தெரியாத நபர்களால் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த இச் சம்பவம் இன்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் பணியாற்றும் சிறைக் காவலாளி ஒருவரின் வீட்டின் மீதே இந்த பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கான காரணம் தெரியவராத நிலையில் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.










