2 இலட்சம் போதை மாத்திரைகள் விசேட அதிரடிப் படையால் கைப்பற்றப்பட்டது..!
[2025-07-13 09:32:39] Views:[11]
இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 2 இலட்சம் போதை மாத்திரைகள் விசேட அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து அதிக போதை மாத்திரைகள் மன்னாரின் கடல் பகுதியூடாகக் கடத்தி வரப்படுவதாக நேற்று முன்தினம் (11) விசேட அதிரடிப் படையினருக்குக் தகவல் கிடைத்தது.
அடிப்படையில், பேசாலை பகுதியில் விசேட மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போதே 2 இலட்சம் போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன்போது சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும், மேலதிக சட்டநடவடிக்கைக்காக சான்றுப் பொருட்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.










