70 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளான வேன்
[2025-07-10 12:50:07] Views:[10]
மாத்தறையிலிருந்து நுவரெலியாவுக்கு இளைஞர்கள் குழுவை ஏற்றிச் சென்ற வான் ஒன்று 70 அடி பள்ளத்தில் விழுந்ததில், வானில் பயணித்த எட்டு பேர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
இவர்கள் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்
இன்று அதிகாலை 5:00 மணியளவில் ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் நானுஓயா டெஸ்போட் தோட்ட பகுதியில் நிகழ்ந்துள்ளது. விபத்தில் காயமடைந்தவர்களை டெஸ்போட் பகுதியில் உள்ள மக்கள் மீட்டு, வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.










