தேங்காய் விலை குறித்த தகவல்
[2025-07-08 19:33:09] Views:[13]
தேங்காயின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். சில மாதங்களாக, 220 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தேங்காய் ஒன்று, தற்போது 100 ரூபாய் முதல் 170 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது.
எதிர்வரும் மாதங்களில் தேங்காய் விலை மேலும் வீழ்ச்சியடையக் கூடும் எனவும் தெரிவித்துள்ளனர்.தற்போது, சந்தையில் தேவைக்கு மேலதிகமாக தேங்காய் இருப்பு அதிகரித்துள்ளதாக விற்பனையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.










