எத்துகால கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட நால்வர் மீட்பு
[2025-07-07 19:20:36] Views:[15]
நேற்று (6) மாலை எத்துகால கடலில் நீராடச்சென்ற நான்கு பேர் கடல் அலையில் சிக்கி, கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினரால் மீட்கப்பட்டனர்.
20, 21, 22 மற்றும் 34 வயதுடையவர்களே இவ்வாறு அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளனர்.
சம்பவத்தின் போது அவ்விடத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உயிர்காப்பு பிரிவு அதிகாரிகள் நீரில் இழுத்துச் செல்லப்பட்டவர்களை காப்பாற்றியதாக தெரியவருகிறது.










