மசாஜ் நிலைய போர்வையில் விபசார விடுதி
[2025-07-07 12:12:10] Views:[11]
ஆயுர்வேத மசாஜ் மையம் என்ற போர்வையில் விபசார விடுதி நடத்தப்பட்டதாகக் கூறப்படும் இடத்தை காவல்துறையினர் சோதனை செய்து ஐந்து பெண்களைக் கைது செய்துள்ளதாக தெரிய வருகிறது.
கட்டுகஸ்தோட்ட நகருக்கு அருகில் அமைந்துள்ள இந்த மசாஜ் நிலையத்தின் உரிமையாளரும் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களில் ஒருவர் என்று தெரிய வருகிறது.










