சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் முகமாக கடல் விமான சேவை
[2025-07-06 10:51:50] Views:[15]
கொழும்பு பெய்ரா ஏரியில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் முகமாக, நீரில் ஏறி இறங்கக்கூடிய கடல் விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
பாதுகாப்புச் செயலாளர் ஏர் வைஸ் மார்சல் சம்பத் துயகோண்டாவின் தலைமையில் பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு செயலாளர் தலைமையிலான இந்தக்க் கூட்டத்தில் இலங்கை கடற்படை, விமானப்படை, பொலிஸ் அதிகாரிகள், சிவில் விமானப் போக்குவரத்து ஆணையகம் உட்பட்ட அமைப்புக்களின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.










