தடம்புரண்டது எரிபொருள் பாரவூர்தி! எரிபொருளை அள்ளிச்சென்ற மக்கள்:
[2025-06-26 13:13:57] Views:[11]
வேகக்கட்டுப்பாட்டை இழந்து எரிபொருள் தாங்கி ஒன்று கிளிநொச்சி குடமுருட்டி பாலத்திற்கருகில் தடண்புரண்டுள்ளது.
முத்துராஜவெலவிலிருந்து பூநகரி வீதி ஊடாக யாழ்ப்பாண்ம் காங்கேசன்துறை நோக்கி பயணித்த எரிபொருள் தாங்கியே இன்று அதிகாலை 1.00 மணிக்கு தடம்புரண்டது.
குறித்த விபத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
டீசல் ஏற்றி வந்த எரிபொருள் தாங்கி விபத்துக்குள்ளானதால் பெருமளவான டீசல் வெளியேறியுள்ளது. அதையடுத்து வீதியால் சென்ற மக்கள் எரிபொருளை கேன்களில் பிடித்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.










