yarlathirady.com

தமிழ்நாட்டில் கரையொதுங்கியுள்ள யாழ்ப்பாண பைபர் படகு.! தொடரும் மர்மம்!!

[2025-06-23 12:02:00] Views:[16]

தமிழ்நாட்டின் நாகப்பட்டின மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை பழைய கலங்கரைவிளக்கம் அருகே இலங்கை நாட்டை சேர்ந்த புதிய பைபர் படகு இயந்திரத்துடன் கரை ஒதுங்கி உள்ளது.

கோடியக்கரை கடற்கரையில் ஆள் இல்லாமல் சந்தேகத்துக்கு இடமாக ஒரு படகு கரை ஒதுங்கி இருப்பதாக மீனவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

தகவல் அறிந்த வேதாரண்யம் போலீசார் உடனடியாக விரைந்து சென்று அந்தப் படகை ஆய்வு செய்தனர். அந்தப் படகு இலங்கை நாட்டைச் சேர்ந்த படகு என்பது படகு பதிவு எண்னை வைத்து உறுதிப் படுத்தினர்.

19 அடி நீளம் கொண்ட, நீலம் மற்றும் மஞ்சள் நிறமான குறித்த படகில் மீன்பிடி வலை, வெளியிணைப்பு இயந்திரம் உள்ளிட்டவை உள்ளது.

இலங்கையிலிருந்து படகில் மர்ம நபர்கள் யாராவது தமிழகத்துக்குள் ஊடுருவி உள்ளார்களா? கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகா? என கியூ பிரிவு போலீசார், கடலோர காவல் குழும போலீசார் படகை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

படகு கரை ஒதுங்கியுள்ள பகுதி காட்டுப்பகுதி என்பதால் யாராவது காட்டில் மறைந்திருக்கிறார்களா என போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


சினிமாசெய்திகள்
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
4000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணா..!!
2026-04-02 19:24:55
நமித் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ராமாயணா. இப்படத்தில் ராமராக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யாஷ் நடிக்கிறார்கள்.