yarlathirady.com

குழந்தை சத்திர சிகிச்சை தொடர்பான மூன்று நூல்கள் வெளியீடு!

[2025-06-23 10:35:30] Views:[12]

குழந்தை சத்திர சிகிச்சை நிபுணரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான வைத்தியர் பா.சயந்தன் எழுதிய குழந்தை சத்திர சிகிச்சை தொடர்பான மூன்று நூல்கள் யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் (21) சனிக்கிழமை வெளியிட்டு வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்கென யாழ் நகரில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சித் தொகுதி கட்டிடத்தில் குறித்த நிகழ்வு நடைபெற்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜா பிரதம விருந்தினராகவும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டு நூலை வெளியிட்டு வைத்தனர்.

நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதி வைத்தியர் இ.சுரேந்திரகுமாரன், சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் எஸ்.ரவிராஜ், குழந்தை சத்திர சிகிச்சை நிபுணர்களான வைத்தியர் சஞ்சய அபேயகுணசேகர மற்றும் பி.சஜீவன், மதத் தலைவர்கள், வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், மருத்துவ பீட மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.


சினிமாசெய்திகள்
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
4000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணா..!!
2026-04-02 19:24:55
நமித் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ராமாயணா. இப்படத்தில் ராமராக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யாஷ் நடிக்கிறார்கள்.