yarlathirady.com

யாழில் கணவன், மனைவி இணைந்து போதைப்பொருள் வியாபாரம்; கைதான கணவன், மனைவி தலைமறைவு.!

[2025-06-19 20:10:34] Views:[15]

யாழ்ப்பாணத்தில் கணவன், மனைவி இருவரும் இணைந்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த நிலையில், கணவன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மனைவி தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பருத்தித்துறை பகுதியில் இளைஞர்களை குறிவைத்து கணவன், மனைவி ஆகிய இருவரும் கஞ்சா மற்றும் ஐஸ் போதைப்பொருட்களை விற்பனை செய்துவருவதாக பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

அதன் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய நபர் 12 கிராம் 40 மில்லி கிராம் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான சந்தேக நபரின் மனைவியும் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுபவர் என்பது தெரியவந்த நிலையில், மனைவி தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மனைவியை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருவதுடன், கைதான கணவரை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


சினிமாசெய்திகள்
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
4000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணா..!!
2026-04-02 19:24:55
நமித் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ராமாயணா. இப்படத்தில் ராமராக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யாஷ் நடிக்கிறார்கள்.