yarlathirady.com

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஹமில்டன் வனசிங்க காலமானார்.!

[2025-06-13 18:09:33] Views:[10]

இலங்கை இராணுவத்தின் 11ஆவது தளபதியான ஜெனரல் ஹாமில்டன் வனசிங்க (91 வயது) காலமானார்.

அவர் சுகயீனமுற்று நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள இராணுவ மருத்துவமனையில் சிறிது காலம் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (13) காலமானார்.

1988 - 1991 காலப்பகுதியில் இராணுவத் தளபதியாக பணியாற்றிய அவர், 1995 இல் ஓய்வு பெற்ற பிறகு, கூட்டு நடவடிக்கைத் தளபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட பல முக்கிய பதவிகளை வகித்தார்.

அவரது உடல் 2025.06.13ஆம் திகதி இறுதி அஞ்சலிக்காக இல: 488/1, மதுகஹவத்த, கலுகொடையாவ, மல்வானை, என்ற முகவரியில் அமைந்துள்ள இல்லத்தில் வைக்கப்படவுள்ளது.

இறுதிச் சடங்கு முழு இராணுவ மரியாதையுடன் 2025.06.15ஆம் திகதி மாலை 5.30 மணிக்கு பொரெல்ல பொது மயானத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.


சினிமாசெய்திகள்
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
4000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணா..!!
2026-04-02 19:24:55
நமித் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ராமாயணா. இப்படத்தில் ராமராக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யாஷ் நடிக்கிறார்கள்.