yarlathirady.com

சட்டத்தரணி தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியவரின் விளக்கமறியல் நீடிப்பு..!

[2025-06-11 19:02:09] Views:[17]

யாழ்ப்பாண சட்டத்தரணி ஒருவர் குறித்து பொய்யான தகவல்களுடன், அவருடைய புகைப்படத்தினை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு அவதூறு பரப்பிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரின் விளக்கமறியலை எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் மல்லாகம் நீதவான் நீதிமன்று நீடித்துள்ளது.

இணுவில் பகுதியை சேர்ந்த சட்டத்தரணி ஒருவர் போலி உறுதிகளை நிறைவேற்றியதாக போலியான தகவல்களை, சட்டத்தரணியின் புகைப்படத்துடன் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியமை தொடர்பில் சட்டத்தரணி சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்த நிலையில் குறித்த சமூக வலைத்தள கணக்கு உரிமையாளர் கயந்த 08ஆம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை விசாரணைகளின் பின்னர் 09ஆம் திகதி திங்கட்கிழமை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் , அவரை இன்றைய தினம் (11) புதன்கிழமை வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுருந்தது.

இந்நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேக நபரை எதிர்வரும் 18 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சினிமாசெய்திகள்
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
4000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணா..!!
2026-04-02 19:24:55
நமித் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ராமாயணா. இப்படத்தில் ராமராக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யாஷ் நடிக்கிறார்கள்.