yarlathirady.com

தர்பூசணி பழம் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாது.! காரணம் தெரியுமா?

[2025-06-06 20:07:59] Views:[43]

கோடைகாலத்தில் உடலில் தண்ணீரின் அளவு குறைந்து கொண்டே இருப்பது இயல்பு. இதனால் கோடைகாலத்தில் அதிக பழ வகைகள் சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

அந்தவகையில், கோடை வெயிலுக்கு இதமாக அனைவரும் அதிகம் எடுத்துக்கொள்ளும் ஒரு பழம் தான் இந்த தர்பூசணி பழம்.

ஆனால், தர்பூசணி சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்க கூடாது என பெரியவர்கள் சொல்ல கேட்டிருப்போம்.

பொதுவாக, தர்பூசணியில் 92% தண்ணீர் இருக்கிறது, எனவே, தர்பூசணி சாப்பிட்ட பின் மேற்கொண்டு தண்ணீர் குடித்தால் செரிமான சக்தியை குறைக்க வாய்ப்புள்ளது.

தர்பூசணி சாப்பிட்ட பின்பு அதன் சாறு, ஏற்கனவே நம் குடலில் தங்கிவிடுகிறது. மேற்கொண்டு தண்ணீர் குடிக்கும் போதுதான் செரிமான கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, தர்பூசணி சாப்பிட்ட பின், 15-20 நிமிடங்கள் கழித்து தண்ணீர் குடிக்கலாம்.

தர்பூசணியில் அதிகளவு கலோரிகள் உள்ளதால் இதை சாப்பிடும்போது தண்ணீர், சர்க்கரை, சோடா என எதையும் கலக்காமல் அப்படியே பழமாகவோ, சாறாகவோ சாப்பிடலாம்.

தற்போது, தர்பூசணியின் இனிப்பு சுவையை அதிகரிக்க சிலர் இந்த பழத்தில் சாட் மசாலாக்களை சேர்த்து சாப்பிடுவதுண்டு. இதனால் அந்த பழத்தில் இருக்கும் நீர்ச்சத்து குறையும். மேலும், செரிமான கோளாறும் ஏற்படும் என கூறப்படுகிறது.

இப்படி மசாலா சேர்த்து சாப்பிடும் போது சுவை நன்றாக இருந்தாலும், இது வயிற்றுக்கு உபாதையை ஏற்படுத்தும்.


சினிமாசெய்திகள்
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
வெளியானது சர்தார்-2 திரைப்படத்தின் அப்டேட்
2026-05-26 11:33:17
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் கார்த்தி, தனது இயல்பான நடிப்பு மற்றும் தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்களால் ரசிகர்களின் மனதில் தனித்த இடத்தைப் பிடித்துள்ளார்.
முதலமைச்சர் விஜய்யின் கடைசி படத்தின் வெளீயீடு தொடர்பான செய்தி..!!
2026-05-25 21:42:18
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் திரையுலக வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படமாக கருதப்படும் இப்படம், பல காரணங்களால் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.