yarlathirady.com

பேனா வடிவிலான துப்பாக்கியுடன் சிக்கிய நபர்..!

[2025-06-04 13:52:40] Views:[17]

பேனா வடிவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

மொரட்டுவை, மோல்பே பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய ஒருவரே இவ்வாறு துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டார்.

களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், பாணந்துறை ஹொரேத்துடுவ பாலம் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்ற ஒருவரை நேற்று மாலை சோதனை செய்தனர்.

அப்போது, ​​குறித்த நபரின் சட்டைப் பையில் இருந்த இந்த வெளிநாட்டு தயாரிப்பு பேனா வடிவ துப்பாக்கி மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இது ஒரு வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி என்றும், அது செயல்படும் நிலையில் உள்ளது என்றும், கொலைக்கு மிகவும் சூட்சுமமாக பயன்படுத்தக்கூடிய ஆயுதம் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபர், சுமார் நான்கரை அங்குல நீளம் கொண்ட இந்த துப்பாக்கியை ஏன் வைத்திருந்தார் என்பது குறித்து களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

சந்தேகநபரை இன்று (04) பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


சினிமாசெய்திகள்
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
4000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணா..!!
2026-04-02 19:24:55
நமித் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ராமாயணா. இப்படத்தில் ராமராக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யாஷ் நடிக்கிறார்கள்.