பொதுமக்களின் பாதுகாப்பிற்காக முப்படைகளை அழைக்க ஜனாதிபதி உத்தரவு.!
[2025-06-03 19:58:41] Views:[13]
பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நாடு முழுவதும் முப்படைகளை அழைக்க ஜனாதிபதி சிறப்பு உத்தரவை பிறப்பித்துள்ளார்.
பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 40வது அத்தியாயத்தின் பிரிவு 12ன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களின்படி அவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் என்று சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று (03) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதேவேளை அரசியலமைப்பின் 121(1)ஆம் உறுப்புரையின் பிரகாரம் மின்சார கட்டண திருத்த சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட மனுவொன்றின் பிரதி தனக்குக் கிடைத்துள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன அறிவித்தார்.










