yarlathirady.com

போதைப்பொருள் கடத்தல்காரரை சுட்டுப் பிடித்த பொலிஸார்.!

[2025-05-31 06:01:11] Views:[15]

வெல்லவாய பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்றுக்கு கிடைத்த தகவலொன்றுக்கு அமைய, வெல்லவாய நகருக்கு அருகிலுள்ள பிரதேசத்தில் சுற்றிவளைப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சுற்றிவளைப்பின் போது, வெல்லவாய பிரதேசத்தில் பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு, பொலிஸாரால் தேடப்பட்டு வந்த 'மஹவெலேமுல்லே ஷான் சுத்தா' என்றும் அழைக்கப்படும் சம்பத் குமார் என்பவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது நடவடிக்கையின்போது, சந்தேக நபர் பொலிஸாரை கூரிய ஆயுதம் ஒன்றால் தாக்கியதால் பொலிஸ் அதிகாரி ஒருவர் சந்தேக நபரின் முழங்காலுக்கு கீழே துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் காயமடைந்து, வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த சந்தேக நபர், பிரதேசத்தில் போதைப்பொருள் கடத்தல் உட்பட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவராகவும், அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் வைத்திருந்த பையொன்றில் இருந்து போதைப்பொருட்களையும் பொலிஸ் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வெல்லவாய பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


சினிமாசெய்திகள்
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
4000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணா..!!
2026-04-02 19:24:55
நமித் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ராமாயணா. இப்படத்தில் ராமராக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யாஷ் நடிக்கிறார்கள்.