10 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் கேட்ட பொலிஸ் அதிகாரி கைது.!
[2025-05-30 22:32:00] Views:[15]
திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவர், இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சாரதி அனுமதி பத்திரம் இன்றி மோட்டார் சைக்கிள் ஓட்டிய 17 வயது சிறுவனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருக்க 10,000 ரூபாய் இலஞ்சமாக கோரியதாக அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட தரப்பினர் இது தொடர்பாக இலஞ்ச ஆணைக்குழுவுக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சந்தேக நபரான பொலிஸ் அதிகாரி திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், அடுத்த மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.










