yarlathirady.com

தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தராக பேராசிரியர் ஜுனைதீன் நியமனம் :

[2025-05-27 11:50:55] Views:[12]

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக மருதமுனையைச் சேர்ந்த பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைதீன் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டு நேற்று (26) கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில் கடந்த ஓகஸ்ட் 8ஆம் திகதி முதல் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பதவி வெற்றிடமாகக் காணப்பட்டது.

புதிய உபவேந்தரைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு கடந்த காலத்தில் நடைபெற்ற நிலையில் இப்பல்கலைக்கழகத்தின் தொழிநுட்பவியல் பீடத்தின் பீடாதிபதியான கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத் பதில் உப வேந்தராக செயற்பட்டு வந்தார்.

இந்நிலையில் பேரவையின் பரிந்துரை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. பல்கலைக்கழகங்கள் சட்டத்துக்கமைவாக பேரவையினால் தெரிவு செய்யப்பட்டவர்களின் விவரங்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

ஜனாதிபதியால் பொறியியல் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எஸ்.எம்.ஜுனைதீன் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக மே மாதம் 26 ஆந் திகதி முதல் நியமிக்கப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


சினிமாசெய்திகள்
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
4000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணா..!!
2026-04-02 19:24:55
நமித் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ராமாயணா. இப்படத்தில் ராமராக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யாஷ் நடிக்கிறார்கள்.