yarlathirady.com

''சஞ்சாரக உதாவ 2025” ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்:

[2025-05-24 13:00:26] Views:[16]

இலங்கையின் சுற்றுலாத் துறையில் பங்குதாரர்களை செயற்திறனுடன் இணைக்கின்ற நாட்டின் மிகப்பெரிய சுற்றுலா கண்காட்சியான " சஞ்சாரக உதாவ 2025" இன்று (23) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் (SLTPB) மற்றும் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு செயற்பாட்டாளர்கள் சங்கம் (SLAITO) இணைந்து ஏற்பாடு செய்த "சஞ்சாரக உதாவ" நாட்டின் சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ள சிறு மற்றும் நடுத்தர வர்த்தகங்களுக்கும், சுற்றுலாத் துறையில் பிரவேசிக்க விரும்பும் எவருக்கும், தங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கான சந்தை வாய்ப்புகளை அடையாளம் காண ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

250 வர்த்தகக் கூடங்களைக் கொண்ட இந்தக் கண்காட்சி இன்றும் (23) நாளையும் (24) நடைபெறும். இதில் ஹோட்டல்கள், பயண முகவர்கள், விமான நிறுவனங்கள், சுற்றுலா சேவை வழங்குநர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா, இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு செயற்பாட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் நளின் ஜெயசுந்தர, இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் தலைவர் புத்திக ஹேவாவசம் மற்றும் இலங்கைக்கான ஜெர்மன் நாட்டுத் தூதுவர் உட்பட விருந்தினர்கள் பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.


சினிமாசெய்திகள்
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
4000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணா..!!
2026-04-02 19:24:55
நமித் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ராமாயணா. இப்படத்தில் ராமராக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யாஷ் நடிக்கிறார்கள்.