yarlathirady.com

தாய்நாடு திரும்பிய யாழ். குயில் பிரியங்கா!!

[2025-05-23 15:01:54] Views:[17]

இந்தியாவின் விஜய் தொலைக்காட்சியின் சுப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 பாடல் போட்டியில் பங்குபற்றிய யாழ். கொக்குவிலை சேர்ந்த சிந்துமயூரன் பிரியங்கா தாய்நாடு திரும்பியுள்ளார்.

அவர் நேற்றைய தினம் (22) யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த போது ஒன்றுகூடிய ஏராளமான மக்கள் அவருக்கு பொன்னாடை போர்த்து கௌரவித்து வாழ்த்துக்களை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் - 10 போட்டியாளர்கள் தெரிவில் கலந்து கொண்டு அவரும் போட்டியில் உள்வாங்கப்பட்டிருந்தார்.

போட்டியில் பங்குபற்றி பிரியங்கா நடுவர்கள் உட்பட பலரது பாராட்டினையும் பெற்றிருந்தார்.

இந்நிலையில் அவரது பாடல் சுற்றானது நிறைவடைந்த நிலையில் அவர் நேற்றையதினம் மீண்டும் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார்.


சினிமாசெய்திகள்
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
4000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணா..!!
2026-04-02 19:24:55
நமித் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ராமாயணா. இப்படத்தில் ராமராக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யாஷ் நடிக்கிறார்கள்.