yarlathirady.com

சிறுவர்களிடையே அதிகரித்துள்ள நோய்கள் - பெற்றோர்களுக்கு எச்சரிக்கை!

[2025-05-16 10:39:14] Views:[12]

சிறுவர்களிடையே தற்போது இன்ப்ளூயன்ஸா, டெங்கு காய்ச்சல் மற்றும் சிக்குன்குனியா ஆகிய மூன்று நோய்களின் பாதிப்பும் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.


இந்த வைரஸ் நோய்களில், இன்ப்ளூயன்ஸாவின் பாதிப்பு அதிகமாக காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.மழையுடனான காலநிலை மற்றும் நுளம்புகளின் அதிகரிப்பு காரணமாக பல தொற்று நோய்கள் மற்றும் வயிற்றுப்போக்கு நோய்களின் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிக்குன்குனியாவின் அறிகுறிகளில் காய்ச்சல், கடுமையான மூட்டு வலி, உடல் வலிகள் மற்றும் சில சந்தர்ப்பங்களில், மூக்கில் ஏற்படும் கறுப்பு நிற அடையாளம், கைகள் மற்றும் கால்களில் கருப்பு புள்ளிகள் ஆகியவை அடங்கும்.


டெங்கு காய்ச்சலும் அதிகரித்து வருவதால், சுகாதாரத் துறை விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனவே, அத்தகைய சிறுவர்களை, மாணவர்கள் கூடும் பிற இடங்களுக்கும் அனுப்புவதற்கு முன்பு, அவர்களை குணப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


சினிமாசெய்திகள்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.