yarlathirady.com

க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

[2025-05-15 18:51:51] Views:[11]

க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான அழகியல் பாட செய்முறைப் பரீட்சைகள் எதிர்வரும் 21ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடைபெறும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த பரீட்சை, நாடு முழுவதும் உள்ள 1228 பரீட்சை நிலையங்களில் 171,100 விண்ணப்பதாரர்களுக்கு நடைபெற உள்ளதாக பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.


எழுத்துத் பரீட்சை மற்றும் செய்முறைப் பரீட்சை இரண்டிலும் மதிப்பெண்கள் பாடங்களின் இறுதி முடிவைத் தீர்மானிக்க பயன்படுத்தப்படும் என்பதால், இரண்டிற்கும் தோற்றுவது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலை விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் மற்றும் கால அட்டவணைகள் அந்தந்த பாடசாலையின் அதிபர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், தனியார் விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் அவர்களின் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


அனுமதி அட்டைகள் கிடைக்கப் பெறாத பாடசாலை பரீட்சார்த்திகள் தமது பாடசாலை எண், பாடசாலையின் பெயர், முகவரி மற்றும் உரிய விவரங்களுடனும் தனியார் பரீட்சார்த்திகள் தங்களின் பெயர் மற்றும் முகவரி, தேர்வு எண், அழகியல் பாடம் பெயர், முகவரி, பரீட்சைச் சுட்டெண், அழகியல் பாடம் முதலிய விவரங்களுடனும் பாடசாலைப் பரீட்சைகள் ஒழுங்கமைப்புக் கிளைக்கு கீழே தரப்பட்டுள்ள தொலைபேசி எண்களுடாக அறியத்தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பரீட்சார்த்திகள் பரீட்சை திணைக்களத்தின் வலைத்தளத்திற்கு (www.doenets.lk) சென்று தங்கள் பரீட்சை எண்ணை உள்ளிடுவதன் மூலம் தங்கள் அனுமதி அட்டைகளை மே 19 முதல் பதிவிறக்கம் செய் யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது


சினிமாசெய்திகள்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.