yarlathirady.com

பல்கலைக்கழக அனுமதிக்கான கையேடு வெளியிடப்பட்டுள்ளது.

[2025-05-02 21:04:01] Views:[15]

பல்கலைக்கழக அனுமதிக்கான கையேடு வெளியிடப்பட்டுள்ளதுகல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் 2024/2025 கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக மாணவர் அனுமதிக்கான வழிகாட்டல் கையேடு இன்று வெளியிடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட இந்தக் கையேடுகள் நாடெங்கிலுமுள்ள பதிவு செய்யப்பட்ட விநியோகஸ்தர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பல்கலைக்கழக அனுமதி விண்ணப்பங்கள் எதிர்வரும் 09 ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்பட இருப்பதுடன், விண்ணப்ப முடிவுத்திகதி இம்மாதம் 30 எனவும், அனுமதிக்கான வழிகாட்டல் கையேடுகளை நாளை 03ஆம் திகதி சனிக்கிழமை முதல் மாணவர்கள் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை முடிவுகளின் படி பல்கலைக்கழக அனுமதிக்குத் தகைமை பெற்ற மாணவர்களில் அரச பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இல. 20, வாட் பிளேஸ், கொழும்பு 07 எனும் முகவரியில் அமைந்துள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

அத்துடன், நாடெங்கிலுமுள்ள பதிவு செய்யப்பட்ட விநியோகஸ்தர்களிடம் கையேட்டுக் கட்டணமாக ரூபா 1,000/= செலுத்தி நேரடியாகப் பெற்றுக் கொள்ள முடியும்.

தபால் மூலம் அனுமதிக் கையேட்டைப் பெற்றுக் கொள்ள விரும்புபவர்கள் இலங்கை வங்கி, ரொறிங்டன் கிளையின் 0002323287 என்ற கணக்கிலக்கத்துக்கோ அல்லது மக்கள் வங்கி, நகர மண்டபக் கிளையின் 167-1-001-4-3169407 என்ற கணக்கிலக்கத்துக்கோ விண்ணப்பக் கட்டணமாக ரூபா 1,000/=வைப்பிலிட்ட சிட்டையுடன் சுயமாகத் தயாரிக்கப்பட்ட வேண்டுகைக் கடிதத்துடன், சுயமுகவரியிடப்பட்ட தபாலுறையுடன் விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறும் மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்ள விரும்புபவர்கள் 011-2695301, 011-269530 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம் எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.


சினிமாசெய்திகள்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.