yarlathirady.com

சமூக பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு;

[2025-04-25 12:44:22] Views:[11]

யாழ்ப்பாண மாவட்டத்தின் 15 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஓய்வூதிய திட்ட நடைமுறைப்படுத்தலை சிறப்பாக மேற்கொண்ட உத்தியோகத்தர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வு நேற்றைய தினம் (24) யாழ்ப்பாணம் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் மாவட்ட இணைப்பாளர் த. சங்கர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஓய்வூதிய திட்ட நடைமுறைப்படுத்தலில் 2024ஆம் ஆண்டு தேசிய ரீதியில் பண சேகரிப்பு அடிப்படையில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களை பருத்தித்தறை, நல்லூர், சண்டிலிப்பாய் ஆகிய பிரதேச செயலகங்கள் பெற்றிருந்ததுடன்,

அங்கத்தவர்கள் இணைப்பு அடிப்படையில் தேசிய விருதிற்கு நல்லூர், பருத்தித்துறை மற்றும் கோப்பாய் ஆகிய பிரதேச செயலகங்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தன.

ஓய்வூதியத் திட்ட நடைமுறைப்படுத்தலில் அகில இலங்கை ரீதியில் இம் முறை யாழ்ப்பாண மாவட்டம் முதலாம் இடத்தினைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


சினிமாசெய்திகள்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.