yarlathirady.com

இலங்கை விமானப்படையின் பயிற்சி விமானம் விபத்து..!

[2025-03-21 17:03:10] Views:[11]

இலங்கை விமானப் படை க்கு சொந்தமான சீன K-8 இன்று வாரியப்போலாவில் விபத்துக்குள்ளானதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

திருகோணமலையில் உள்ள சீன விரிகுடா விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்ட விமானம், விபத்துக்கு முன்னர் ரேடார் தொடர்பை இழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது குறித்த விபத்தின் போது விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளும் பாராசூட்களைப் பயன்படுத்தி பாதுகாப்பாக வெளியேறி தரையிறங்கியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் அல்லது காயங்கள் எதுவும் ஏற்படவில்லை,என்பதுடன் இந்த விபத்தில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. அதேவேளை குறித்த விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.


சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.