yarlathirady.com

விடுதலைப் புலிகள் உட்பட 67 அமைப்புகளுக்கு இந்தியா தடை!

[2025-03-18 13:25:11] Views:[11]

தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட 67 அமைப்புகள் அடங்கிய தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் திருத்தப்பட்ட பட்டியலை இந்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் மற்றும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி, மத்திய அரசால் தடை செய்யப்பட்ட மற்றும் பயங்கரவாத அமைப்புகளின் திருத்தியமைக்கப்பட்ட 67 அமைப்புகள் கொண்ட பட்டியலே இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, 45 பயங்கரவாத அமைப்புகளாகவும், 22 சட்டவிரோத அமைப்புகளாகவும் வகைப்படுத்தப்பட்டு திருத்தி அமைக்கப்பட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த அமைப்புகள் இந்தியாவில் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், இந்த அமைப்புகளுக்கு ஆட்சேர்ப்பது, நிதி திரட்டுவது உள்ளிட்ட உதவிகளை செய்வது கடும் குற்றம் எனவும், அவ்வாறான நபர்களுக்கு எதிராக சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசால் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகள்;

தமிழீழ விடுதலைப் புலிகள், பாபர் கால்சா இன்டர்நேஷனல், காலிஸ்தான் கமாண்டோ படை, காலிஸ்தான் ஜிந்தாபாத் படை, சர்வதேச சீக்கிய இளைஞர் கூட்டமைப்பு, லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது, மக்கள் பாசிச எதிர்ப்பு முன்னணி, ஹர்கத் உல் முஹாஜூதின், அல் உம்ர் முஹாஜூதின், ஜம்மு காஷ்மீர் இஸ்லாமிய முன்னணி, அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி, சிமி, தமிழ்நாடு விடுதலைப் படை, தமிழ் தேசிய மீட்புப் படை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) மக்கள் போர் உள்பட 45 அமைப்புகள் இந்தியாவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், போப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா, மக்கள் விடுதலை இராணுவம், தேசிய பெண்கள் முன்னணி, தேசிய மனித உரிமைகள் அமைப்பு கூட்டமைப்பு, அகில இந்திய இமாம்கள் கவுன்சில் உள்பட 22 அமைப்புகள் சட்டவிரோத அமைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.


சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.