yarlathirady.com

பாடசாலை விடுமுறை குறித்து கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு..!

[2025-03-14 10:39:57] Views:[11]

பாடசாலை விடுமுறை குறித்து கல்வி அமைச்சு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, நாட்டிலுள்ள அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலமான பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதலாம் கட்ட கல்விச் செயற்பாடுகள் இன்றுடன்(14) நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்விச் செயற்பாடுகள் எதிர்வரும் ஏப்ரல் 01 ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகள் குறித்த விடுமுறைக் காலத்தில் இடம்பெறவுள்ளது.

அதற்கமைய சாதாரண தரப் பரீட்சைகள் எதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பமாகி எதிர்வரும் 26 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. இந்தநிலையில் முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்விச் செயற்பாடுகள் ஏப்ரல் 01 ஆம் திகதி ஆரம்பமாகி 11 ஆம் திகதி வரை நடைபெறும்.

ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை மீண்டும் விடுமுறை வழங்கப்பட்டு முதலாம் தவணையின் மூன்றாம் கட்ட கல்விச் செயற்பாடுகளுக்காக ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.